அனுப்புனர்,
நிறுவனர்,
ஆர்.ஈஸ்வர மூர்த்தி,
அகிலம் சமூக சேவை மன்றம்,
திருநெல்வேலி டவுண்.
பெறுநர்,
உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி.
ஐயா,
வணக்கம்.
திருநெல்வேலி டவுண் குறுக்குத்துறை ரயில்வே கேட் கீழ்புறம் ரோட்டை ஒட்டி விவசாய நிலங்களுக்கு செல்லும் பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று அந்தப்பணி அறைகுறையாக நிற்கிறது. ரயில்வே கேட் ஓட்டி மிகுந்த மண்மேடாக குவிக்கப்பட்டு அப்படியே கிடக்கிறது. ரோடு பாதி அடைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர்.எனவே மேற்படி இடத்தை பணிகளை முடித்து மண்மேடை அப்புறப்படுத்தி சாலையை விரிவு செய்து விபத்தில்லா நிலையை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர்.ஈஸ்வர மூர்த்தி,
நிறுவனர்,
அகிலம் சமூக சேவை
மன்றம்,
பதிவு எண் 54/2022
திருநெல்வேலி டவுண்.
Collector’s Reply:
“தங்களின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.. உரிய அலுவலரால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
– மாவட்ட ஆட்சியர்,
திருநெல்வேலி.

