

அனுப்புனர்,
நிறுவனர்,
ஆர்.ஈஸ்வரமூர்த்தி
அகிலம் சமூக சேவை மன்றம்,
திருநெல்வேலி டவுண்.
பெறுநர்,
உயர்திரு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி.
ஐயா,
வணக்கம்,
திருநெல்வேலி பேட்டை ஐ.டி.ஐ. முன்பிருந்து ம.தி.தா இந்துக்கல்லூரி வரை செல்லும் பாதையில் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக உடைக்கப்பட்ட ரோடுகள் சரிசெய்ய படாமல் அப்படியே போட்டுவிட்டார்கள் மேலும் இந்த ரோட்டில் காமராஜர் மேல் நிலைப்பள்ளி, ம.தி.தா.கல்லூரி என கல்வி நிலையங்கள்,
மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தினர் பயன்படுத்தும் முக்கியமான சாலை, மோசமான இந்த சாலையில்
ஆஸ்பத்திரி மற்றும் அவசர தேவைக்காக எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.சுமார் எட்டு மாதகாலமாக ரோடு மிகவும் பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த ரோட்டினால் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது படுமோசமாகவும். பயணிக்க முடியாத நிலையிலும் உள்ள இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து தர பொதுமக்கள் நலன்கருதியும், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்களின்நலன் கருதியும் அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
அகிலம் சமூக சேவை மன்றம்,
திருநெல்வேலி.
பதிவு எண் 54/2022
