அனுப்புனர்,
நிறுவனர்,
அகிலம் சமூக சேவை மன்றம், பதிவு எண்( 54/22 )
திருநெல்வேலி டவுண்.
பெறுநர்,
உயர்திரு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி.
ஐயா,
வணக்கம்.
திருநெல்வேலி கருப்பந்துறை, மேலநத்தம் தரைப்பாலம் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது ஓரளவு சரி செய்ய பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டாலும் இன்னும் சேதமடைந்த பகுதி முழுக்க தார் போட்டு சரிசெய்யாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதைச் சரிசெய்வதோடு மட்டுமல்லாமல் மழைவெள்ளத்தால் இருபுறமும் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது மின் விளக்குகள் இல்லாமல் இருள் மண்டிக்கிடக்கிறது,
வாகன வெளிச்சத்தில் தான் டு வீலர் மற்றவாகனங்கள் பயணிக்கும் நிலைஉள்ளது. இதனால் விபத்து அடிக்கடி நிகழ்கிறது, எனவே உயர்மட்டபாலம் அமைக்கும் வரை சோலார் மின் விளக்குகள் ஓரு 7 விளக்குகள் அமைத்துக் கொடுத்து பொதுமக்கள் விபத்தில்லாமல் பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள
அகிலம் சமுக சேவைமன்றத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர.ஈஸ்வர மூர்த்தி,பி.காம்.,
நிறுவனர்,
அகிலம் சமூக சேவை மன்றம்.
பதிவு எண் 54/2022
திருநெல்வேலி டவுண்.
“தங்களின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உரிய அலுவலரால் நடவடிக்கை எடுக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
– மாவட்ட ஆட்சியர்,
திருநெல்வேலி.
