



அனுப்புனர்,
நிறுவனர்,
ஆர்.ஈஸ்வரமூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,
திருநெல்வேலி டவுண்.
பெறுநர்,
உயர்திரு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி.
ஐயா,
வணக்கம்,
திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் கீழ் பாலத்தில் எல்.இ.டி விளக்குகள் சுமார் 90 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளில் சுமார் 40 க்கு மேற்பட்ட விளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் வாகன விளக்குகளின் ஓளியில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
மழைக்காலம் என்பதால் கூடுதல் வெளிச்சம் இருக்க வேண்டும் எனவே மேற்படி கீழ்பாலத்தில் எரியாத விளக்குகளை அகற்றிவிட்டு, புதிய விளக்குகளை அமைத்துக் கொடுக்க பொதுமக்கள் நலன்கருதி அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி !
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர்.ஈஸ்வர மூர்த்தி,
நிறுவனர்,
அகிலம் சமூக சேவை மன்றம்,
பதிவு எண் 54/2022
திருநெல்வேலி டவுண்.