அனுப்புனர்,
நிறுவனர், ஆர்.ஈஸ்வரமூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம், திருநெல்வேலி டவுண்.
பெறுநர், உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.
ஐயா,
வணக்கம்,திருநெல்வேலி டவுண் தெற்குமவுண்ட் ரோடு காட்சி மண்டபம் திருப்பத்திலிருந்து பேட்டை கோடீஸ்வரன்நகர் மெயின்ரோடு வரை 1/2 கி.மீ ரோடு மிகவும் படுமோசமாகவும். பயணிக்க முடியாத நிலையிலும் உள்ளது.இந்த பகுதியில் ரோட்டில் செல்லும் கனரகவாகனங்கள் துவங்கி இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த மோசமான சாலையால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.மேற்படி இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு, பகலாக கிழக்கு பகுதியிலிருந்து மேற்காகவும், மேற்குபகுதியிலிருந்து கிழக்குகாகவும் பயணிக்கும் சூழ்நிலையில் இது பொதுமக்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சிரமத்தை உருவாக்குகிறது.மேற்படி இடத்தை புதுப்பித்துக்கொடுக்க பொதுமக்கள் நலன்கருதி அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி !
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர்.ஈஸ்வர மூர்த்தி,
நிறுவனர், அகிலம் சமூக சேவை மன்றம், பதிவு எண் 54/2022. திருநெல்வேலி டவுண்.
