ஐயா, வணக்கம்., திருநெல்வேலி மாநகரம் ஆனித் தேர்த்திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.அதே நேரத்தில் திருநெல்வேலி டவுண் திருப்பணிக்கு பகுதியிலிருந்து அருணகிரி தியேட்டர் திரும்பும் தெற்கு மவுண்ட் ரோடு முதல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வரை ரோடு படுமோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.தேரோட்டம் அன்று அனைத்து வாகனங்களும் அப்பகுதி வழியாக தான் செல்லும்., மேற்படி ரோட்டால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படும்.எனவே மேற்கூறிய ரோட்டை புதுப்பிக்காவிட்டாலும் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக பேஜ் ஒர்க் செய்து கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.. இப்படிக்கு,
நிறுவனர் – R.Eswaramurthy, Akilam Samuga Sevai Mandram, Tirunelveli Town.
“தங்களின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.. உரிய அலுவலரால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. – மாவட்ட ஆட்சியர்,திருநெல்வேலி.
