





2023 டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக களப்பணியில் இருக்கும் போது கடந்த 20/12/2023 மாலை Veedu Computers உரிமையாளர் அருமை சகோதரர் சண்முகம் அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பொருட்கள் வேண்டும் என லிஸ்டு கேட்டார், 21/12/2023 மதியம் நான் அவரிடம் மளிகைப் பொருட்கள்,அரிசி,பாய்,போர்வை உள்ளிட்டவைகள் கேட்ட 3 மணிநேரத்தில் என்னிடம் சேர்த்துவிட்டார்.
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வீடுகளுக்கே நிவாரண பொருட்களைக் கொண்டு சேர்த்தேன்.அண்ணன் சண்முகம் அவர்களுக்கும்,பொருட்களை என்னிடம் கொண்டு சேர்த்த அவருடைய நண்பருக்கும் அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக தலைவணங்குகிறேன்.
களப்பணிகள் மன்ற பொறுப்பாளர்களுடன் இன்னும் தொடரும்…